தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை!.. ஹாலிவுட்டுக்கு போகும் மகாராஜா!..
மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டுக்கு போகிறது..

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சச்சனா நமீதாஸ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரும் நடித்து 2024ம் வருடம் வெளியான திரைப்படம் மகாராஜா. தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் தந்தை பற்றிய கதை இது..
ஆனால் அந்த கதையை சொன்ன விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சச்சனா நமீதாஸ் இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருது சச்சனாவுக்கு கிடைத்தது. இந்த படம் பாலிவுடிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதோடு, சீனா மொழியில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது.
இந்நிலையில்தான் மகாராஜா திரைப்படம் தற்போது ஹாலிவுட்டுக்கு போகிறது. அதாவது மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த தகவலை மகாராஜா பட தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் நடிகர் மேத்யூ மெக்கோனாஹே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
பல வருடங்களாகவே ஹாலிவுட்டிலிருந்து பல கதைகளை சுட்டு நமது கோலிவுட் இயக்குனர்கள் படமெடுத்திருக்கிறார்கள். ஆனால் முதல்முறையாக ஒரு தமிழ் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.












