ஐயோ ஹார்ட் பீட்டு எகிறுதே!.. ஓவர்டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் மாளவிகா!...
Malavika mohanan: மாளவிகாவின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர். அப்படியே மாளவிகாவுக்கும் சினிமாவில் ஆர்வம் ஏற்பட அப்பாவுக்கு உதவியாக படப்பிடிப்புகளுக்கு போனார். அப்போது மம்முட்டியின் கண்ணில் படவே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைத்தார்.
அதன்பின் நடிப்பே அவருக்கு தொழிலாகிப்போனது. அதேநேரம், வாளிப்பான உடல் வாகு இருந்ததால் கவர்ச்சி கன்னியாக ஆசைப்பட்டரா தெரியவில்லை. தூக்கலான கவர்ச்சி காட்டி மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது. அம்மணியின் அழகில் காஜி ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
இதன் காரணமாக பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவருக்கு சின்ன வேடம்தான். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். மாறன் படம் ஓடவில்லை. எனவே, அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
சரி பாலிவுட் பக்கம் போவோம் என முடிவெடுத்து மும்பைக்கு போய் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெளியான பின் தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார்.
ஒருபக்கம், பாலிவுட்டில் வாய்ப்பை பெற அழகை அசத்தலாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாளவிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.