---Advertisement---

விஜய் சார் வேறலெவல்!.. சான்ஸே இல்ல!.. மமிதா பைஜூ சொன்ன அந்த விஷயம்!…

Published on: February 18, 2026
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் மமிதா பைஜூ. 2017ம் வருடம் முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.. ஆனாலும் 2024ம் வருடம் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் இதுவரை ரசிகர்கள் பிரபலப்படுத்துகிறது. குறிப்பாக அந்த படத்தை கோலிவுட் ரசிகர்களும் கொண்டாடினார்கள். எனவே, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக மமிதா பைஜூ மாறினார்.

எனவே தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தது. ஜிவி பிரகாஷுடன் ரெபல், பிரதீப் ரங்கநாதன் டியூட் ஆகிய படங்களில் நடித்தார். இதில் டியூட் சூப்பர் ஹிட் அடித்தது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.. மேலும் தனுஷுடன் கர, சூர்யாவின் 46வது படம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஜனநாயகன் படம் பற்றியும் விஜயுடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட மமிதா பைஜூ ‘விஜய் சார் மிகவும் பன்சுவல். ஷூட்டிங் லேட்டாக வந்து நான் பார்த்ததே இல்லை.. ரொம்ப ஸ்வீட்.. நான் சொன்ன ஒரு சின்ன விஷயத்தை இரண்டு மாசம் கழிச்சு கூட ஞாபகம் வச்சிருப்பாரு.. அதை நானே மறந்து போயிருப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக கருதப்படும் நிலையில் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் போது இதுபற்றி விஜயிடம் கேட்டபோது ‘நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேனா இல்லையாயா என்பது தேர்தலின் ரிசல்ட்டுக்கு பின்னரே முடிவு செய்வேன்’ என விஜய் தன்னிடம் சொன்னதாக சொன்னவர் மமீதா பைஜுதான் என்பது குறிப்பிடத்தக்கது..