Connect with us

புது படத்துக்கு எ.ஆர்.ரஹ்மானை கழட்டிவிடும் மணிரத்னம்!.. என்னாச்சி?..

rahman

latest news

புது படத்துக்கு எ.ஆர்.ரஹ்மானை கழட்டிவிடும் மணிரத்னம்!.. என்னாச்சி?..

ரோஜா திரைப்படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்தினம். இளையராஜாவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து புதிய இசையமைப்பாளரை தேடிய போது அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கிடைத்தார். அதன்பின் கடந்த 34 வருடங்களாகவே மணிரத்னம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்தார். மணிரத்னம் – ரஹ்மான் கூட்டணி என்றேலே பாடல்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும்.

இந்த கூட்டணியில் என்னவானது என்று தெரியவில்லை. மணிரத்தினம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் சாய் அபயங்கரை இசையமைக்க வைக்கலாமா என்கிற யோசனை வந்திருக்கிறதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

ஆனால், இதுதான் இறுதியான உறுதியான முடிவா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படத்தில் இசையமைத்தது முதலே தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதால் மணிரத்னத்திடம் சம்பளம் பேச மாட்டாராம்.. மணிரத்தினம் என்ன கொடுப்பாரோ அதை வாங்கிக் கொள்வாராம். அப்படிப்பட்ட ஒருவரை விட்டு விட்டு சாய் அபயங்கர் பக்கம் மணிரத்னம் செல்வாரா என்பது தெரியவில்லை.. அப்படி நடந்தால் ரஹ்மான் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக முடியும் என்றே சொல்லலாம்.

To Top