கோடீஸ்வர மாப்பிள்ளையை வளைத்து போட்ட தமிழ் சினிமா நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..

by sankaran v |   ( Updated:2024-03-03 11:09:34  )
Asin, Hansika
X

Asin, Hansika

படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு மார்கெட் குறைந்துவிட்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பெரிய கோடீஸ்வரர்களைக் கல்யாணம் செய்த 6 நடிகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஸ்ரீதேவி

Sridevi

Sridevi

தமிழ்சினிமா ரசிகர்களால் மயிலு என செல்லமாக அழைக்கப்பட்டவர். பாலிவுட்டிலும் கோலோச்சினார். அழகு, திறமை கொண்ட இவருக்கு எத்தனையோ பேர் வலை வீசினர். ஆனால் திடீரென பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இத்தனைக்கும் அவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தார். அவர் கோடீஸ்வரர் என்ற காரணத்தினாலேயே ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அசின்

விஜய், அஜீத் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் அசின். பாலிவுட்டில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.

குட்டி ராதிகா

இயற்கை படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர். இவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் வயது வித்தியாசம் நிறையவே இருந்தாலும் பணம் புரள்கிறது என்பதற்காக குட்டி ராதிகா இவரைத் திருமணம் செய்து கொண்டாராம். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளனர்.

ரீமாசென்

இவரை இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்தினார். விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போனதால் ஷ_ கரன்சிங் என்ற கோடீஸ்வர மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டாராம்.

ஹன்சிகா

பப்பி நடிகையாக பவனி வந்த இவர் சிம்புவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அது பிரேக் அப் ஆனது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். வாய்ப்புகள் குறைந்ததால் தொழில் அதிபர் ஷோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரகுல் பிரீத்சிங்

தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் படங்களில் நடித்து அசத்தினார். தெலுங்கிலும் பிரபலம். கடந்த ஆண்டு தயாரிப்பாளரும், கோடீஸ்வரருமான ஜாக்கி பட்நாயைத் திருமணம் செய்து கொண்டார்.

Next Story