Modha Rathri Box Office : 2 நாளாகியும் 50 லட்சத்தை கூட நெருங்காத மொத ராத்திரி!

X
Modha Rathri Box Office : 2 நாளாகியும் 50 லட்சத்தை கூட நெருங்காத மொத ராத்திரி!

2 நாட்களில் ‘மொத ராத்திரி’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஜோடியாக நடித்துள்ள புது தமிழ் படம் தான் ‘மொத ராத்திரி’.

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இந்த படம் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தான் இதை தயாரித்துள்ளனர்.

இதில் முக்கியமான வேடங்களில் ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், சுமித்ரா தேவி, அப்துல் லீ, சேத்தன், சங்கீதா பாலன், ஷெல்லி, பானுப்ரியா, கார்த்திகேயன் டிகே, வர்ஷினி கார்மேகம் நடித்துள்ளார்கள்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.38 லட்சம் மட்டும் தான் வசூல் செய்துள்ளது.