அதெல்லாம் பொய்!.. நாங்க கன்ஃபார்மா வரோம்!.. மூக்குத்தி அம்மன் 2 படக்குழு சொல்வது என்ன?..
மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. காமெடி கலந்த காதல் திரைப்படங்களை அவர் தொடர்ந்து இயக்கி வருகிறார். சமீப காலமாக அரண்மனை போன்ற ஹாரர் கலந்த காமெடி படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்து வருகிறார்.
தற்போது சுந்தர்.சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியிருக்கிறது.
இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்நிலையில்தான், இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் ‘கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் நன்றாக இல்லை.. விஜய், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் போல இருக்கிறது’ என ட்ரோல் செய்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த சுந்தர்.சி கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்றும் வேலையில் இறங்கினார். எனவே இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் இதன் காரணமாக தீபாவளி ரிலீஸிலிருந்து இந்த படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது
.
ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகளை மிகவும் வேகமாக செய்து வருகிறார்களாம். எனவே வருகிற தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என தெரிகிறது.












