Connect with us

Cinema News

Nepoleon: கேள்வி கேட்டு நெப்போலியன் மருமகளை அழ வைத்த சுகாசினி?!… எமோஷனலான தனுஷ்!…

நடிகை சுகாசினி கேட்ட கேள்வியால் நெப்போலியன் மருமகள் அக்ஷயா அழுது இருக்கின்றார்.

கடந்த 7-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் மிக விமர்சையாக நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கும் அக்ஷயாவுக்கும் திருமணம் நடைபெற்ற முடிந்தது. தமிழ் பாரம்பரிய முறைப்படி அனைத்தையும் சரியாக செய்து தனது மகனின் திருமணத்தை செய்து முடித்து இருக்கின்றார் நடிகர் நெப்போலியன். நெப்போலியன் மூத்த மகனான தனுசுக்கு தசை சிதைவு நோய் பாதிப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…

இதனால் பலரும் இந்த திருமணம் குறித்து விமர்சனம் சொன்னாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் தனது மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என்று எண்ணி நெப்போலியன் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்தி முடித்து இருக்கின்றார். இந்த திருமணத்திற்கு மீனா, குஷ்பூ, கார்த்தி, ராதிகா சரத்குமார், பாண்டியராஜன், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தார்கள்.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுசுக்கு திருமணம் என்பது சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சாத்தியப்படுத்தி காட்டுவேன் என்று நம்பிக்கையுடன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கின்றார் நடிகர் நெப்போலியன். திருமணம் தொடங்கி விருந்து வரை அனைவருமே இந்த திருமணத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த அளவுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு நெப்போலியன் மகன் தனுஷ் தனது மனைவி அக்ஷயா உடன் முதன்முதலில் பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியை நடிகை சுகாசினி எடுத்திருந்தார். பல கேள்விகளை தனுஷிடமும் அவரின் மனைவி அக்ஷயாவிடவும் கேட்டு வந்தார். தனுசுடன் முதல் சந்திப்பு முதல் ஃபோன் கால், நிச்சயதார்த்தம், மாமனார் மற்றும் மாமியார் சுதா என அனைவர் குறித்தும் அக்ஷயா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசி வந்தார்.

மேலும் இவர் போன்ற கணவர் எனக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுகாசினி அக்ஷயாவிடம் உங்களது பெற்றோர்களை பிரிந்து அமெரிக்காவில் செட்டிலாக போகிறீர்கள். உங்கள் குடும்பத்தை எவ்வளவு மிஸ் பண்ணுவீங்க என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் மிஸ் செய்வேன்.

இதையும் படிங்க: Amaran: போடுறா வெடிய!… 200 கோடி கிளப்பில் இணைந்த அமரன்… உச்சகட்ட மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!…

அதிலும் அக்கா மகளை அதிகமாக மிஸ் பண்ணுவேன் என்று அந்த பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது அக்ஷயாவுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இதை பார்த்த தனுஷ் எமோஷனல் ஆகிவிட்டார். இதையடுத்து சுகாசினி, நான் சொல்கிறேன் நிச்சயம் நீங்கள் உங்கள் குடும்பத்தை மிஸ் பண்ண மாட்டீங்க. அந்த அளவுக்கு நெப்போலியன் குடும்பத்தினர் உங்களை மிக சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்தார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top