ஓவர் கிரிஞ்சு… ஒரு மண்ணும் இல்ல… நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரி.. Honest review இதோ!..

by Akhilan |   ( Updated:2024-11-18 02:02:40  )
nayanthara
X

nayanthara

Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமண டாக்குமெண்ட்ரியான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா எப்போதுமே பிசினஸில் குறியாக இருப்பவர். அந்த வகையில் தன்னுடைய திருமணத்தை வகையாக காசு பார்க்க எண்ணி பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸில் விற்பனை செய்தார். இவர்களது திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..

கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் அவரின் பிறந்தநாள் தினமான நவம்பர் 18 வெளியிடப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்கான ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்படும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இதற்காக நயன்தாரா கையில் எடுத்த யுக்தி தனுஷ் மீதான குற்றச்சாட்டு. சரியாக டாக்குமெண்டரி வெளியாகும் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிப்படையாக வன்மத்தைக் கொட்டி அவர் எழுதிய கடிதம் இணையத்தளங்களில் தனுஷ் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் யாருக்கும் தெரியாமல் கடந்துவிட இருந்த டாக்குமெண்டரி இணையதளங்களில் பேசு பொருளாகியது. இந்த நிலையில் இன்று திருமண டாக்குமெண்டரி நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கிறது. தனுஷ் தரப்பு மறுத்த நானும் ரவுடிதான் காட்சிகளும் அதில் இடம் பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை? வீராவுக்குப் பிறகு இசை அமைக்கவே இல்லையே..!

இதனால் இது குறித்து அடுத்த பிரச்சினைகள் தொடர்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான டாக்குமெண்டரியில் அப்படி என்னதான் இருக்கும் என படம் பார்த்த ரசிகர்கள் ரிவ்யூ செய்து கலாய்த்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் முதல் பகுதி ஓகே என்ற ரகத்திலும், இரண்டாம் பகுதி ஓவர் கிரிஞ்சாகவும் இருக்கிறது.

எமோஷனல் காட்சிகள் கூட நடிப்பாகவே தெரிகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக பிளான் செய்து எடுக்கப்பட்ட டிராமா போலவே இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நடிக்க செஞ்சிருக்கலாம். ஒரு மண்ணும் இல்லை. இதெல்லாம் தேவையா? ஓவர் மோசம் எனவும் கமெண்ட்கள் பறந்துவருகிறது.

Next Story