எனக்கு அதபத்தி தெரியாது!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட ரஜினி!. வச்சி செய்யும் நெட்டிசன்கள்!...

by சிவா |   ( Updated:2024-09-01 13:07:32  )
rajini
X

நடிகர் ரஜினி சினிமாவில் மட்டுமே வீர வசனம் பேசுவார். எதிரிகளை பந்தாடுவார். பாய்ந்து பாய்ந்து அடிப்பார். பன்ச் வசனம் பேசுவார். தன்னை பெரிய வீரர் போல காட்டிக்கொள்வார். ஆனால், நிஜ வாழ்வில் அதற்கு அப்படியே நேர் எதிரானவர். ஒரு பொதுவான சமூக பிரச்சனை பற்றி கூட பேசமாட்டார். நாடே பரபரப்பாக பேசும் விஷயம் பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்.

அதையும் மீறி அவர் வெளியே வரும் போது செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் போய்விடுவார். அல்லது மழுப்பலான பதிலை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்ஃ அதற்கு காரணம் ஏதேனும் பேசி அது சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது. அது ஊடகங்களுக்கு தீனியாக மாறிவிடக்கூடது என நினைப்பார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் வேணாம் ‘காசு’ தான் முக்கியம்… சூர்யாவை வறுக்கும் ரசிகர்கள்!

பத்திரிக்கையாளர், நடிகர் மற்றும் ரஜினியின் நண்பருமான சோ ஒருமுறை ‘பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் மிகவும் கவனமாக பேசுங்கள். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினால் உங்க இமேஜ் அவ்வளவுதான்’ என சொல்லிவிட பல வருடங்களாக அதை அப்படியே பின்பற்றி வருகிறார்.

விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர் ஏதேனும் கேட்டால் சிரித்துக்கொண்டே போய்விடுவார். இல்லையெனில் ஒரு வார்த்தையில் எதாவது சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இதுதான் ரஜினியின் ஸ்டைல். தற்போது மலையாள சினிமா உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

mohanlal siddique

mohanlal siddique

சித்திக், ஜெய்சூர்யா, இயக்குனர் ரஞ்சித் போன்ற முக்கிய நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள். மோகன்லால் தலைமையிலான நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஹேமா கமிட்டி போல ஒன்றை அமைக்க வேண்டும் என நடிகைகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று ரஜினியை பார்த்த செய்தியாளர்கள் இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

meems

#image_title

அதற்கு ‘அதுபற்றி எனக்கு தெரியாது’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இதையடுத்து ஒரு சீனியர் நடிகர் என்கிற முறையில் ரஜினி இதுபற்றி கருத்து சொல்லியிருக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மீம்ஸ்களும் வெளியாகி வருகிறது.

meems

#image_title

Next Story