கல்யாணத்தில் கலக்கல் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!.. ‘அண்ணியார்’ என குவியும் கமெண்ட்ஸ்!..

தோழியின் திருமணத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றுள்ள நிலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் உடன் நிவேதா பெத்துராஜ் கோர்த்து விட்டு கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், அதற்கு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் யாரும் தனக்கு துபாயில் பங்களா வாங்கித் தரவில்லை என்றும் தனக்காக கார் பந்தயத்தை சென்னையில் நடத்தவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கனகா நிலைமை இப்படி மோசமா போனதுக்கு காரணமே இவங்க தானா?.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!..
ஆனால், நெட்டிசன்கள் தொடர்ந்து அவர் எந்த ஒரு போஸ்ட் வெளியிட்டாலும் ’அண்ணியார்’ என போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். பிங்க் நிறப் புடவையில் செம க்யூட்டாக சிரித்த முகத்துடன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அனி மற்றும் ஏகேஸ் என்பவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது தொடர்ந்து நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் பருவு எனும் வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் அந்த வெப் சீரிசை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஸ்கெட்ச் போடும் எஸ்கே!.. அடுத்து மலையாளத்துல இருந்து ஆள் இறக்குறாராம்!..