நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல ப்படங்களில் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலரும் உயிரிழந்த சம்ப்ப்பவம் உலகையே கவலைக்குள்ளாகியது. இந்த சூழ்நிலையில் அங்கு சுற்றுலா சென்ற தனது பெற்றோர் குறித்த தகவல் தெரியவில்லை.. அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் அதிகாரிகள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என இன்ஸ்டாகிராமில் நிவேதா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நேபாளத்திலும் திபெத்தியப் பகுதியிலும் நடந்தவற்றைப் பார்த்தது, வாழ்க்கையில் முக்கியமானவை எவை என்பதை நமக்கு மீண்டும் நினைவு படுத்தியுள்ளது. பணம், புகழை தேடி ஓடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காகவோ அலைவதோ இல்ல. ஒரே ஒரு நொடியில் அது அனைத்தும் நம்மை விட்டு சென்றுவிடும்.
ஆழ்ந்து மூச்சை நன்றாக இழுங்கள்.. உங்கள் வேகத்தை குறைத்து உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கூர்ந்து கவனிங்கள்.. உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள்.. உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள் என நிவேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.







