Connect with us

OTT Watch: ஸ்குவிட் கேம் சீசன் 2 மட்டுமல்ல சீசன் 3ம் மோசம் பண்ணிடுச்சு… இப்படி ஒரு ஷாக்கை எதிர்பார்க்கலையே!

latest news

OTT Watch: ஸ்குவிட் கேம் சீசன் 2 மட்டுமல்ல சீசன் 3ம் மோசம் பண்ணிடுச்சு… இப்படி ஒரு ஷாக்கை எதிர்பார்க்கலையே!

TT Watch: பிரபல வெப் சீரிஸான ஸ்குவிட் கேம் சீசன் 3 வெளியாகி இருக்கும் நிலையில் இரண்டாவது சீசன் ஏமாற்றத்தை சரி செய்ததா இல்லையா என்பதுதான் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

ஒரு தீவுக்குள் 400க்கும் அதிகமான மக்களை அவர்கள் பிரச்னையை காரணம் காட்டி அழைத்து வந்து சின்ன விளையாட்டை விளையாட சொல்லி அதில் தோல்வி அடைந்தால் கொன்று விடும். ஆபத்தான கேமாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது ஸ்குவிட் கேம் சீசன் 1.

இதை தொடர்ந்து சீசன் 2 எப்போ வெளியாகும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்குவிட் சீசன் 2 வெளியாவதாக அறிவிப்பு வந்தது. செமையா இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான். போட்டியை முடிக்காமல் பாதி விளையாட்டில் ஹீரோ தன்னுடன் ஒரு டீமை ரெடி செய்துக்கொண்டு எதிர்க்க செல்வதுடன் இரண்டாவது சீசன் முடிந்தது.

இந்நிலையில் மூன்றாவது சீசன் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது. இதில் பிரச்னை ஆனாலும் கேமை நடத்தும் டீம் இந்த பிரச்னையை சமாளித்து விடுகின்றனர். ஹீரோவை மட்டும் மீண்டும் உயிருடன் கேமிற்குள் அழைத்து வந்துள்ளனர்.

ஒரு பக்கம் போலீஸ் இந்த தீவு குறித்து விசாரித்து கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் முகமூடி டீமில் இருக்கும் ஒரு பெண் தனக்கு தெரிந்த குழந்தையின் அப்பாவை காப்பாற்ற போராடுகிறாள். இதில் போட்டி ஒரு பக்கம் சுவாரஸ்யமாக செல்கிறது.

கிட்டத்தட்ட சீசன் 2ல் வரவேற்பை பெற்ற போட்டியாளர்கள் எல்லாமே 2வது எபிசோட்டிற்குள்ளேயே கொலை செய்து விடுகின்றனர். இன்னும் 4 எபிசோட்டை எப்படி ஓட்டுவார்கள் எனக் யோசிக்க போட்டியை வைத்து பரபரப்பை ஏத்தி வருகின்றனர்.

ரொம்ப இழுக்காமல் திரில்லிங்கான எபிசோட்களாக செல்கிறது. இருந்தாலும் போட்டியின் கிளைமேக்ஸில் கர்ப்பமாக இருந்த 222வின் குழந்தையும் அவர் எண்ணிலே போட்டியாளராக இருக்கிறார். அந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான போட்டியாளர் இறுதி சுற்றில் ஹீரோவுடன் போட்டி போடுகிறார்.

குழந்தையை காப்பாற்ற ஹீரோ போராட போட்டியை தொடக்காமலே சண்டை போட்டு அவர் கீழே விழுந்து விடுகிறார். இப்போ ஹீரோ மற்றும் குழந்தை மட்டுமே இருக்க போட்டியை தொடங்கி அந்த குழந்தையை கீழே வைத்து விட்டு இவர் இறந்து விடுகிறார். இங்கே பலருக்கு ஏமாற்றத்தை தந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

இருந்தும் முதல் சீசன் பரபரப்பை இந்த சீசனாலும் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் போட்டியை நடத்தி வந்த பிரண்ட்மேன் ஹீரோ முதல் சீசனில் வெற்ரி பெற்ற பணத்தை மீண்டும் அவர் வங்கியில் போட்டி மகளிடம் சேர்த்து விடுகிறார்.

அந்த குழந்தை டிடெக்டிவிடம் பணத்துடன் ஒப்படைக்கின்றனர். முகமூடி டீம் பெண் மிஸ்ஸான தன் மகளை தேடி செல்கிறார். இதில் அடுத்த சீசனுக்காக ஆள் சேர்க்க ரோட்டில் போட்டி நடக்கிறதை பிரண்ட் மேன் பார்ப்பதுடன் சீசன் முடிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top