சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் பராசக்தி. இந்த படம் 1960களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒருபக்கம் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக இந்த படம் வெளியாகிறது என சொல்லப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்,. இந்த படத்துக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஒருபக்கம் இந்த படம் ரசிகர்களை முழுவதுமாக கவரவும் தவறிவிட்டது. எனவே படம் பெரிய ஹிட் அடிக்கவில்லை. அதேநேரம் இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது..
Zee5 ஒடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியான பராசக்தி இரண்டு நாட்களில் 10 மில்லியன் நிமிடங்கள் வரை ஸ்ட்ரீம் ஆனதாம். இந்த படம் தியேட்டரில் வெளியான போது சென்சாரில் 30 இடங்களில் வசனங்களை மியூட் செய்து விட்டார்கள். அது எல்லாமே முக்கிய வசனங்கள் என தெரிகிறது, இந்நிலையில் வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை வசனங்களில் மியூட் எதுவும் இல்லாமல் Uncut Version-ஐ வெளியிடுகிறார்கள். இது பராசக்தி பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
