க்ரைம் த்ரில்லர் படமான Daayra ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்?

X
க்ரைம் த்ரில்லர் படமான Daayra ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்?

பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து கடந்த வாரம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ‘கலீஃபா’. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘டாய்ரா’ (Daayra). இதில் பிரித்விராஜுடன் இணைந்து பாலிவுட் நடிகை கரீனா கபூரும் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். இதன் ஜானர் க்ரைம் த்ரில்லராம்.

இப்படத்தின் ட்ரெய்லரை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி மலையாளம், ஹிந்தி என இரண்டு மொழிகளில் திரைக்கு வருகிறது.