யார் அந்த பிரதீப்? பிரியங்காவுக்கு ஏன் இவ்ளோ சப்போர்ட்? வெளியான அதிர்ச்சி தகவல்

by Rohini |
pradeep
X

pradeep

Priyanka: தற்போது பிரியங்கா மணிமேகலை தமிழர்களின் பிரச்சினையாக உருமாறியிருக்கிறது. மீடியாக்கள் முழுவதும் இப்போது இவர்கள் பிரச்சினையைப் பற்றித்தான் பேசி வருகிறார்கள். இது நாட்டுக்கு முக்கியமானது இல்லை என்று ம.க.பா சொன்னாலும் தமிழர்களுக்கான பிரச்சினையாக இப்போது பார்க்கப்படுகிறது. இதை பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.

பிரியங்காவால் மணிமேகலை மட்டுமில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பல ஆங்கர்கள் வெளியேறிருக்கிறார்கள் என்ற கருத்தை கூறியிருக்கிறார். அவர்களில் டிடி, விஜே பாவனா, அனிதா சம்பத், திவ்யா துரைச்சாமி, ஜாக்குலின் என பட்டியல் நீண்டு கொண்டேதான் போகும். இவர்கள் எல்லாருமே வெளியேறியதற்கு பிரியங்காவின் ஆதிக்கம் தான் காரணம் என்று பாண்டியன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 5 கெட்டப்புல கலக்கப் போகும் வடிவேலு… டைரக்டர் அவரா…? அப்போ சூப்பர்ஹிட் தான்!

அந்தளவுக்கு அதிகாரத்தை பிரியங்காவுக்கு யார் கொடுத்தார் என பார்க்கும் போது விஜய் டிவியின் தலைமை பிரதீப் மில்ராய்தான் பிரியங்காவுக்கு பக்கபலமாக இருக்கிறாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் பிரதீப் மில்ராய்தான் பொறுப்பு. இவருக்கும் பிரியங்காவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்ல முறையில் வொர்க் அவுட் ஆகும் என்றும் பாண்டியன் கூறியிருக்கிறார்.

இதனால்தான் பிரியங்காவின் கணவரே அவரை விட்டு சென்றார் என்றும் பாண்டியன் கூறினார். விஜய் டிவியில் இருந்து போனவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் புகார் கொடுத்தாலும் அதை பிரதீப் மில்ராய் கண்டுக்கவே மாட்டாராம். முழு அதிகாரத்தையும் பிரியங்காவுக்கே கொடுத்திருக்கிறாராம். பேசாமல் விஜய் டிவி என்று சொல்வதை விட பிரியங்கா டிவி என்று வைத்திருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார்.

இதையும் படிங்க: தொட்டதுக்கே இந்த தண்டனையா? குஷ்பூ மாதிரி இருங்க.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

ஆனால் சீக்கிரம் ஹேமா கமிட்டி விஜய் டிவி பக்கமும் வரும் என்றும் பாண்டியன் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியை பொறுத்தவரைக்கும் தமிழர்களை வெளியேற்றும் நிறுவனமாகத்தான் பார்க்கப்படுகிறது. பிரியங்காவும் தமிழர் இல்லை. பிரதீப் மில்ராயும் தமிழர் இல்லை. அதனால் இரண்டு பேரிடம் தான் விஜய் டிவியே இயங்கி வருகிறது என பாண்டியன் கூறினார்.

கஷ்டப்பட்டு உழைத்து ஒரு இடத்தில் இருக்கும் இந்த விஜய் டிவி இது போன்ற நிகழ்வுகளால் வின் டிவி, கேப்டன் டிவி மாதிரி காணாமல் போய்விடும். நிர்வாகம் சரியில்லை. அதனால்தான் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பல பேர் ஏன் சன் டிவிக்கு போனார்கள்? இந்த மாதிரி செயல்களினால்தான். அதனால் பல மணிமேகலைகள் உள்ளே இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: தக் லைஃப் கையில் தான் இந்தியன் 3ன் ரிலீஸ்… இது செம கிளாஷா இருக்கே..!

பல பிரியங்காக்கள் ஆட்டத்தை ஒடுக்க வேண்டும்.பிரதீப் மில்ராய் போன்றவர்களை விஜய் டிவியின் நிர்வாகம் வெளியேற்ற வேண்டும் என பாண்டியன் கூறியிருக்கிறார்.

Next Story