சினிமால கூட இப்படி காட்டலயே!.. வேறலெவலில் காட்டி கிறங்கவைக்கும் ராஷி கண்ணா...

Raashi khanna: டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. பள்ளி மற்று கல்லூரி படிப்பையும் அங்குதான் படித்தார். பள்ளியில் படிக்கும் போது பெரிய பாடகி ஆக வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்தது. ஆனால், கல்லூரியில் படிக்கும்போது அந்த எண்ணம் போய் கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால், காலம் ராஷி கண்ணாவை மாடலிங் துறைக்கு இழுத்து சென்றது. சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படித்தான் சினிமாவுக்குள்ளும் நுழைந்தார். ஹிந்தி படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் போனார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
அப்படி அவர் தமிழில் அறிமுகமான படம்தான் இமைக்கா நொடிகள். முதல் படத்திலேயே தனது அழகால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதன்பின் அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் படத்திலும் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடமென்றாலும் சரி, கிளாமர் வேடமென்றாலும் சரி இரண்டிலும் அழகாக நடிக்கும் திறமை உடையவர். ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், புதிய வாய்ப்புகளை பெறுவதற்காகவும் சினிமாவில் காட்டாத கவர்ச்சியை சமூகவலைத்தளங்களில் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியிருக்கிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.