இதுதான் டிரெஸ்ஸா செல்லம்!. வேற எதுவும் போட மாட்டியா!.. ரைசாவிடம் உருகும் ரசிகர்கள்...

raiza wilson
Raiza wilson: ஊட்டியில் பிறந்து பெங்களூரில் செட்டில் ஆனவர் ரைசா வில்சன். மாடல் அழகி மற்றும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்கெட்டிங்கில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பெங்களூரில் நடந்த சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.
மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியில் கலந்து கொண்டவர் இவர். இவர் முதன் முதலில் சினிமாவில் நடித்தது. தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படம்தான். அதில் காஜலுக்கு பி.ஏ.போல் வருவார். அதன்பின்னர்தான் அவருக்கு பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் கொஞ்சம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. தனுஷு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது லவ், தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் ரைசா பெற்றிருக்கிறார். ஒருபக்கம், திரையுலகில் வாய்ப்புகளை வாங்குவதற்காக கவர்ச்சி ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து மேலே மெல்லிய உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரைசா ‘இதுதான் டிரெஸ்ஸா செல்லம்!. வேற எதுவும் போட மாட்டியா!’ என நக்கலடித்து வருகின்றனர்.