ஆணிய புடுங்க வேணாம்!.. வாரணாசி படத்தில் ராஜமவுலி எடுத்த அதிர்ச்சி முடிவு!…
வாரணாசி படத்தின் டிரெய்லர் தொடர்பான அப்டேட்..

பாகுபலி திரைப்படம் படம் மூலம் பேன் இண்டியா அளவில் ரசிகர்களிடம் பிரபமானவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்திய அளவில் பேன் இண்டியா என்கிற கான்செப்ட்டை ராஜமௌலிதான் உருவாக்கி கொடுத்தார். அதன் பின்னர்தான் புஷ்பா, புஷ்பா 2, கேஜிஎப், கேஜிஎப் 2, காந்தாரா, காந்தாரா 2 போன்ற படங்கள் வெளியானது..
அதேபோல் ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படமும் பென் இண்டியா அளவில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தற்போது மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரித்திவிராஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதத்தோடு வாரணாசி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையவிருக்கிறது.
அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வாரணாசி திரைப்படம் பல மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு டிரெய்லர் வீடியோவை வெளியிட வேண்டாம் என ராஜாமவுலி முடிவெடுத்திருக்கிறாராம். படத்தின் முக்கிய காட்சிகளை இணைத்து டிரெய்லர் வீடியோவாக வெளியிட்டால் படத்தின் கதையை ரசிகர்கள் கணித்து விடுவார்கள் அல்லது அவர்கள் கற்பனைக்கு எதையாவது நினைத்துக் கொள்வார்கள்..
அவர்கள் எதிர்பார்த்து படத்தில் இல்லையென்றால் அது படத்திற்கு எதிர்மறையாக போக வாய்ப்புண்டு என அவர் கருதுகிறாராம்.
அதேநேரம் பட வியாபாரத்தில் படத்தை வாங்கும் வினியோகஸ்தர்கள் கண்டிப்பாக டிரெய்லரை வீடியோவை வெளியிட வேண்டும் எனக் கூறினால் வேறு வழியில்லாமல் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்புண்டு என சொல்கிறார்கள்.












