
41 வருடங்களுக்கு பின் ரஜினியும் கமலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை ரெட்ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
நேற்று இந்த படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதோடு இன்று மதியம் 12.07 மணிக்கு படத்தின் புரமோ வீடியோவும் வெளியாகும் என அறிவித்தார்கள். அதன்படியே தற்போது அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது..
நெல்சனின் ஸ்டைலில் இந்த புரமோ வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.. ஸ்டைலான உடையில் ரஜினியும், கமலும் ரெடியாகி ஸ்டைலாக நடந்து வருகிறார்கள். அதன்பின் காரில் இருவரும் அமர பின் சீட்டில் அனிருத்தும், நெல்சனும் இருக்கிறார்கள். ‘சார் ஒரு பிஜிஎம் ரெடியா இருக்கு.. கேக்குறீங்களா?’ என அனிருத் கேட்க, ‘அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேட்கணும்’ என கமல் சொல்கிறார்கள்.

‘யார் ஹீரோ?’ என கமல் கேட்க நெல்சனும், அனிருத்தும் அமைதியாக இருக்க ரஜினி ‘கேட்கிறாங்கல்ல.. சொல்லுங்கப்பா’ என்கிறார். அதன் பின் ஆக்சிலேட்டரை கமல் வேகமாக அழுத்த கார் அங்கிருந்து வேகமாக கிளம்புது போல அந்த புரமோ வீடியோவை எடுத்திருக்கிறார்கள்.. புரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் வீடியோ வேறலெவல்.. தியேட்டர் தெறிக்கப்போகுது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.