கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸுக்கு ரெடியாகி வரும் படம் தான் ‘ஜெயிலர் 2’. இதை இயக்குநர் நெல்சன் இயக்க, ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் வலம் வர போகிறார்கள்.
இப்படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் போஸ்ட் புரொடக்ஷன் வொர்க் செம்ம ஃபாஸ்ட்டாக நடந்து வருகிறது.
அனிருத் இசையில் இதன் முதல் சிங்கிள் ட்ராக் ‘அல்ல போலேலோ’ கடந்த வாரம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்பாடலின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.







