Cinema History
ரஜினியை கண்டெக்டராக காதலித்து நடிகராக்கிய காதலி… ஆனால் கடைசியில் நடந்தது தான் கொடுமை!…
Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய காதலியை மிஸ் செய்து அதற்கு வருத்தப்பட்டு கொண்டு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் அந்த காதலி தான் அவர் வாழ்க்கையே மாற்றிய சம்பவங்கள் கசிந்துள்ளது.
பெங்களூரில் ரஜினிகாந்த் கண்டெக்டராக வேலை செய்து கொண்டிருந்த சமயம். அவர் பஸ்ஸில் வரும் பெண்களுக்கு ஸ்டைலாக இருக்கும் அவரை பார்க்கவே அத்தனை ஆர்வமாக இருக்குமாம். அப்படி அந்த பஸ்ஸில் வந்தவர் தான் டாக்டர் நிர்மலா. கண்டெக்டராக இருந்த சிவாஜி ராவை டாக்டர் நிர்மலாவுக்கு ரொம்பவே பிடித்துவிடுகிறதாம்.
இதையும் படிங்க: மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை
ரஜினிக்கும் நிர்மலா மீது காதல் மலர்ந்தது. அடிக்கடி பேருந்தில் அவர் வர இருவருக்கும் பேருந்தில் தான் எல்லா சந்திப்பும் நடந்திருக்கிறது. இருவருக்கும் சாதாரண நட்பு தொடங்கி காதலாக மாறி இருக்கிறது. அந்த பஸ்ஸில் அடிக்கடி பேசிக்கொள்வதோடு சரியாம். ஒருநாள் ரஜினி தான் நடித்த நாடகத்தினை பார்க்க நிர்மலாவுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
அவரும் நாடகத்தை வந்து நேரில் பார்த்து இருக்கிறார். அதில் ரஜினியின் நடிப்பை பார்த்து ரொம்பவே பிரமித்துவிட்டாராம். அவருக்கு நடிப்பு தான் சரியென நினைத்தார் நிர்மலா. உடனே ரஜினிக்கே தெரியாமல் அவர் பெயரில் சென்னையில் உள்ள ஃபிலிம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு, விண்ணப்பித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வெயிலாவது மழையாவது.. காலுல விழுற சீனில் கொளுத்துற வெயிலில் தனுஷ் செஞ்ச விஷயம்
இதையடுத்து அவருக்கும் அனுமதி கடிதம் வீட்டுக்கு வந்ததாம். அதை பார்த்து குழம்பினாலும் சந்தோஷமாக காதலியிடம் கொண்டு சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். அதை அப்ளை பண்ணுனதே நான்தான் என நிர்மலா சொல்லினாராம். ஆனால் ரஜினி அங்கு இருக்க தன் சூழ்நிலை இடம் கொடுக்காதே எனக் கூறுகிறார்.
அப்போதும் அவரை விடாத நிர்மலா கையில் இருந்த காசை கொடுத்து அனுப்பி இருக்கிறார். சென்னை சென்று கல்லூரியில் சேர்ந்த பின்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நிர்மலாவும் அவரது குடும்பத்தினரும் பெங்களூரில் இல்லாமல் போனார்கள். அவர் பற்றிய தகவலே இல்லை. அந்த பிரிவு ரஜினிகாந்தை ரொம்பவே பாதித்ததாம்.