சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு தான் கடைசி!.. இனி யாருக்கும் வாய்ப்பு இல்ல.. கமலின் அதிரடி முடிவு!..

Published on: January 11, 2024
---Advertisement---

Kamalhassan: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவர் நடிகர் மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கு பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் பல படங்களை அவரின் நிறுவனம் தயாரித்து வந்து இருக்கிறது. தற்போது அதுகுறித்த ஒரு ஷாக் தகவல் தான் கசிந்துள்ளது.

1981ம் ஆண்டு ராஜபார்வை முதல்முறையாக இந்நிறுவனம் தயாரித்தது. ஆனால் அப்போது இந்த நிறுவனத்துக்கு ஹாசன் பிரதர்ஸ் என்ற பெயரே இருந்தது. பின்னரே அது ராஜ்கமல் என மாற்றப்பட்டது. அடுத்து விக்ரம் முதல் பாகத்தினை தயாரித்தது. இதிலும் கமலே நடித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

பின்னர் சத்யராஜின் நடிப்பில் வெளிவந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தினை தயாரித்தது. வேறு நடிகர்களின் படங்களை இந்நிறுவனம் தயாரித்தது இதுவே முதல்முறை. அதன் பின்னர், சதி லீலாவதி, சத்யா, நாயகன், தேவர் மகன் உள்ளிட்ட கமலின் பெரும்பாலான படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.

இதுவரை கமலை வைத்து மட்டுமே தயாரித்த இந்நிறுவனம் அக்‌ஷரா ஹாசனுக்காக கிடாரம் கொண்டான் படத்தினை தயாரித்தது. தற்போது அதிசயமாக சிலம்பரசன் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தினை தயாரித்து வருகிறது. அதனை போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஒரு படமும் இந்த பேனரின் கீழ் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க: நெட்பிளிக்ஸ்ல கல்யாண கேசட் தான் வரல!.. நயன்தாராவோட அன்னபூரணிக்கும் வடக்கன்ஸ் வேட்டு வச்சிட்டாங்களே!

இந்த இரு படங்கள் முடிந்த பின்னர் ராஜ்கமல் நிறுவனத்தின் கீழ் இனி எந்த படங்களும் தயாரிக்க போவது இல்லை என கமல் முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிறுவனத்தில் இருந்து மகேந்திரன் நீக்கப்பட்டு விட்டார் என்றும், கமலின் அரசியல் நகர்வுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.