பள்ளிக்கட்டு சபரி மலைக்கு.. ரவி மோகனின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

X
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு.. ரவி மோகனின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

நடிகர் ரவி மோகன் சைரன், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய முந்தைய படங்களைப் போல மிகப்பெரிய வெற்றியை பெறும் படத்திற்காக தொடர்ந்து காத்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரவி மோகன் தற்போது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கியிருநதார். அப்படம் 2025-ல் படப்பிடிப்பை நிறைவு செய்ததுள்ள நிலையில் வெளியீட்டிற்கு தாமதமாகிவருகிறது. மேலும்,ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் 2026 ஆகஸ்ட் 28 வெளியீடு என தகவல்கள் பரவியிருந்தாலும், தற்போது அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ரவி மோகன், தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தற்போது ப்ரோ க்ளப் நடித்துவருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு பணிகளை தாண்டி தற்போது ரவி மோகன் புதிய முயற்சியாக இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். An Ordinary Man என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், ரவி மோகன் இயக்குநர் விஷ்ணு சசி சங்கருடன் இணையும் படம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. இப்படம் ஐயப்ப சுவாமி பின்னணியைக் கொண்டதாக இருக்கும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகளில் ரவி மோகன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய மாளிகைபுரம் படத்தை இயக்கியவர் தான் இந்த விஷ்ணு சசி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ”பள்ளிக்கட்டு சபரி மலைக்கு” என்கிற டைட்டிலும் பரிசீலனையில் உள்ளதாக கூறுகின்றனர்.