ravi
ravi

ரவிமோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் டீஸர் தற்போது வெளியாகியிருக்கிறது. சமீபகாலமாக ரவிமோகன் ஹீரோவாக நடித்த படங்கள் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. கடைசியாக அவர் வில்லனாக நடித்த பராசக்தி படத்தில் ரவிமோகனின் கேரக்டர் பெரியளவில் பேசப்பட்டது. வில்லன் கேரக்டரை தத்ரூபமாக செய்திருந்தார் ரவிமோகன்.

அவர் மனைவியுடனான பிரச்சினைக்கு பிறகு ரவிமோகனின் தோற்றம், செயல்பாடுகள் என முற்றிலும் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அவர் மேடையேறும் ஒவ்வொரு விழாவிலும் மறைமுகமாக அவரது வாழ்க்கை பிரச்சினையை பற்றி பேசாமல் வரமாட்டார். குட்ட குட்ட குனிந்து கொண்டே போக கூடாது . ஒரு நாள் எழணும் என்றெல்லாம் பேசியிருந்தார்.

அந்த வகையில் அவர் நடித்த கராத்தே பாபு படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. டாடா பட இயக்குனரான கணேஷ் கே பாபுதான் கராத்தே பாபு படத்தையும் இயக்கியிருக்கிரார். ஸ்க்ரீன் சீன் கம்பெனி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒரு பொலிட்டிக்கல் தலைவராகவும் கராத்தே மாஸ்டராகவும் டூயல் கேரக்டரில் அசத்தியிருக்கிறார் ரவிமோகன்.

இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், காளிவெங்கட், சக்தி பி வாசு என முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். பொலிட்டிக்கல் ரீதியாக நடக்கும் பிரச்சினைகள், எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை பற்றி விளக்கும் படமாகவும் இருப்பதாக டீசரை பார்க்கும் போது தெரிகிறது.

குறிப்பாக அதில் வைக்கப்பட்ட வசனங்களுக்கு கண்டிப்பாக தியேட்டரில் கிளாப் வரும். நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ரவிமோகன். ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வருடம் மே மாதம் படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.