சோனியா விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தானாம்…! பேட்டியில் உண்மையை சொன்ன கஸ்தூரிராஜா!..

Published on: August 11, 2024
---Advertisement---

Sonia agarwal: பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இரண்டு மகன்களுக்கும் விவாகரத்து ஆன நிலையில் முதல் மருமகள் சோனியா அகர்வால் குறித்து அவர் பேசியிருக்கும் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் சோனியா அகர்வால் நடித்திருப்பார். அப்போதே இருவருக்கும் காதல் கசிந்தது. பின்னர் இருவரும் 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நடிப்பில் இருந்தும் சோனியா விலகினார்.

இதையும் படிங்க: 2வது நாளில் 2 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் இறங்கி அடிக்கும் அந்தகன்!….

பின்னர் நான்கு வருடம் கழித்து 2010ம் ஆண்டு சோனியா அகர்வாலை செல்வராகவன் விவாகரத்து செய்தார். அதன்பின்னர், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கஸ்தூரி ராஜா பேசி இருக்கும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில்,  தனுஷ், செல்வராகவன், என்னுடைய இரண்டு மகள்கள்  என்னுடைய நான்கு பிள்ளைகளும் ஒரே கேங்கில் இருப்பார்கள். முதல் மகள் கொஞ்சம் வெகுளி. எளிதாக ஏமாந்து விடுவார். ஆனால் என்னுடைய இரண்டாவது மகள் மற்றும் தனுஷ் இருவரும் வெவரம். அத்தனை சேட்டை செய்வார்கள்.

இதையும் படிங்க: இது வேற லெவல் ப்ரோமோஷன்! புது ரூட்டில் சூரி.. என்னெல்லாம் பண்றாரு பாருங்க

இவர்களிடம் என் மருமகள் தான் பாவம். அவருக்கு இவர்கள் பேசுவதும் புரியாது. இவர்களும் செட்டாகவில்லை. என்னடா இந்த குடும்பத்தில் வந்து மாட்டிக்கிட்டோமே என்ற ரீதியில் தான் நினைத்து கொண்டு இருந்தார். கடைசியில் இவர்களை பொறுத்துக் கொண்டுதான் சென்றார். அவருக்கும் வேறு வழியில்லை எனவும் பேசி இருப்பார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவும் நிலையில் அப்போ பேசி பேசியே சோனியாவை துரத்திவிட்டாங்களோ என ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் விவாகரத்துக்கு தனுஷை காரணம் சொன்ன நிலையில் அண்ணன் விவாகரத்துக்கே இவர் தான் காரணமா எனவும் பேச்சுக்கள் அடிப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.