Connect with us

ரஜினியை விட டி.ஆர். செமயா ஆடுறாரே!.. கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?…

latest news

ரஜினியை விட டி.ஆர். செமயா ஆடுறாரே!.. கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?…

Coolie song: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் கூலி. ரஜினி, லோகேஷ் என இருவருக்குமே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இருவரும் கூட்டணி போட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. லியோ படத்திற்கு பின் லோகேஷ் இயக்கியுள்ள திரைப்படம் இது.

வேட்டையன் படம் சரியாக போகாத நிலையில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா என பல மற்ற மொழி நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதோடு, பாலிவுட் நடிகர் அமீர்கானும் இந்த படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். அனேகமாக இந்த பாடல் ரஜினி அறிமுகமாகும் துவக்கப்பாடலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி நடன அசைவுகளை அமைத்திருக்கிறார். புரமோஷனுக்காக அனிருத்தும், டி.ஆரும் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்கள். அதேபோல், சாண்டியும் அனிருத்தோடு இணைந்து நடனமாடி அசத்தியிருக்கிறார். டி.ஆர் மற்றும் அனிருத்தின் குரலில் பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. இந்த பாடலுக்கு ரஜினி நடனமாடும்போது தியேட்டரில் விசில் பறக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இதில், ஆச்சர்யம் கொடுக்கும் வகையில் அனிருத்தும் செமயாக நடனம் ஆடியிருக்கிறார்.

4 நிமிடம் 17 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ வெளியாகி 50 நிமிடங்களிலேயே 6 லட்சம் பார்வையாளர்களை தாண்டிவிட்டது. விரைவில் இந்த வீடியோ யுடியூப் டிரெண்டிங்கில் வரும் என கணிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top