வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. ரிப்பீட் மோடில் ரசிக்க வைக்கும் ரித்திகா சிங்...

Ritika singh: சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். சினிமாவில் நடிப்பதற்கு முன் உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்தார். இறுதிச்சுற்று முதல் படம் என்றாலும் ஒரு தேர்ந்த நடிகை போல நடித்து ஆச்சர்யப்பட வைத்தார்.

ritika
இறுதிச்சுற்று படத்தில் அவரின் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. இந்த படம் ஹிட் அடிக்கவே இந்த படத்தின் தெலுங்கு, ஹிந்தி ரீமேக்குகளிலும் ரித்திகாவே அந்த வேடத்தில் நடித்தார். அதன்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தான் ஒரு இயல்பான பெண் போலவும் நடிக்க முடியும் என நிரூபித்தார்.
அதன்பின் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் ஓ மை கடவுளே அவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது. இந்த படத்தில் நூடுல்ஸ் மண்டையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் இந்த படம் போல் மற்றொரு படம் அமையுமா என்பது சந்தேகம்தான்.
விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். எல்லாவற்றையும் விட ரஜினி இப்போது நடித்து வரும் வேட்டையன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளே ஆச்சர்யப்படும் படி கட்டழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்., அந்த வகையில், அசத்தலான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது.