சைஃப் அலி கான் Vs அக்ஷய் குமார்… வெளியானது Haiwaan ட்ரெய்லர்!

X
சைஃப் அலி கான் Vs அக்ஷய் குமார்… வெளியானது Haiwaan ட்ரெய்லர்!

மலையாளத்தில் நடிகர் மோகன் லால் – இயக்குநர் பிரியதர்ஷன் காம்பினேஷனில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஒப்பம்’. இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இப்போது இதன் ஹிந்தி ரீமேக்கை ‘ஹைவான்’ (Haiwaan) என்ற பெயரில் பிரியதர்ஷனே இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக சைஃப் அலி கான் நடித்துள்ளார்.

அவருக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இன்று இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.