கிராமத்துல கரும்பு காடு.. இதுல கார் அவ்வளவுதான் – டாக்ஸிக்கையையும் விட்டு வைக்காத சவுக்கு சங்கர்

X
கிராமத்துல கரும்பு காடு.. இதுல கார் அவ்வளவுதான் – டாக்ஸிக்கையையும் விட்டு வைக்காத சவுக்கு சங்கர்

யஷ் நடிப்பில் இன்று வெளியான படம் டாக்ஸிக். நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திரபட்டாள்மே இப்படத்தில் நடித்துள்ளனர். நள தமயந்தி படத்தில் நாயகியாக நடித்த கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜன நாயகன் படத்தை தயாரித்த கே வி என் நிறுவனம் சார்பில் வெங்கட் நாராயணா அதிக ப்பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றையதாக கூறப்படுகிறது. முதல் நாளே படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன.

இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது யூடியூபில் டாக்ஸிக் படம் குறித்த விமர்சனத்தை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

முன்பெல்லாம் கரும்பு காட்டுலதான் ஒதுங்குவாங்க இது கார்ல ஒதுங்குறாங்க என்று நக்கலடித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருந்தது. இவ்வளவு பெரியப் டானா இருக்குறார். 100 கணக்கான பேரை சுட்டு தள்ளுராரு. ஆனால் ஹோட்டல்ல ஒரு ரூம் போட்டு தங்ககூடாதா எப்ப பாரு ஒரு காரு அதுவும் இத்துபோன காருலயே இருக்காரே?. படத்திற்கு டாக்ஸிக் அப்படி பேர வச்சதகற்காக வரவன் போரவன் கையெல்லம் வெட்டி தள்ளுரார். கொஞ்ச அசந்தால் நம்ம முகத்துல இரண்டு கைகள் வந்து விழும் போல. 3 மணி நேரம் சுட்டு தள்ளுகிறார் மனிதர் என்று நக்கலடித்துள்ளார்.