ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவதற்காக ஒவ்வொரு வாரமும் புது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த வாரம் மூன்று தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது.
அயம் கேம் :
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் தான் ‘அயம் கேம்’ (I’m Game). இந்த படத்தில் கயாடு லோஹர், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன், கதிர், ஆண்டனி வர்கீஸ், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இம்மார்டல் :
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் தான் ‘இம்மார்டல்’ (Immortal). இந்த படத்தில் கயாடு லோஹர், டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்சு மகாராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
4 இடியட்ஸ் :
சஜோ சுந்தர் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடித்துள்ள படம் தான் ‘4 இடியட்ஸ்’. இந்த படத்தில் பிரக்யா நயன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், இந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.







