Connect with us

Cinema News

திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் அஜித் முக்கியமானவர். அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பில்லா மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் மூலம் மாஸ் காட்டி தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

ஆனால், எந்த நடிகரும் செய்யாத படி தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர் அஜித். ஆனாலும் இவருக்கு ரசிகர் மற்றும் ரசிகை கூட்டம் குறையவில்லை. இத்தனைக்கும் அஜித் அவர் நடிக்கும் படங்களின் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியிலோ, சினிமா விழாக்களிலோ கூட கலந்துகொள்வது இல்லை.

 

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், இவர் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் அப்படியே இருக்கிறார்கள். அதிகபட்சம் படப்பிடிப்பு தளத்திலோ, அல்லது அவர் செல்லும் இடங்களிலோ ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அவ்வளவுதான். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆனால், படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ajithshalini

அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினி மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் அஜித். என்னதான் சினிமாவில் ஹீரோ, லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்தாலும், மாஸ் நடிகராக வலம் வந்தாலும் ஒரு பொறுப்பான கணவன், பொறுப்பான அப்பா, பொறுப்பான குடும்ப தலைவனாக வலம் வருகிறார்.

சினிமாவில் நடித்து வந்த ஷாலினி அஜித்தை திருமணம் செய்தபின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கணவன், குழந்தைகள் என முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடனும், மனைவியுடன் தனியாகவும் நேரம் கழிக்க அஜித் தவறுவதே இல்லை. அவ்வப்போது சில புகைப்படங்களும் வெளியாவதுண்டு.

ajith

இந்நிலையில், அஜித்தை திருமணம் செய்து 24 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் தனது 24வது திருமண விழாவை கணவர் அஜித்துடன் கொண்டாடிய ஷாலினி அஜித்துடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அஜித் – ஷாலினிக்கு பலரும் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top