இந்த நடிகையால்தான் சைந்தவியை ஜிவி பிரிந்தாரா? கசிந்த வீடியோ
GV Prakash: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவர் மனைவி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து நடக்க பிரபல தமிழ் நடிகை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் தம்பதிகளாக இருக்கும் ஒரு சில ஜோடிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அவர்கள் தொழிலை விட அவர்களின் காதலுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிக்கும். ஆனால் இத்தகைய தம்பதிகள் திடீரென பிரிவை அறிவிக்கும் போது அது ரசிகர்களையும் பாதிக்கும்.
இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review
தொடர்ச்சியாக இதே மாதிரியான பிரிவு கோலிவுட்டில் நடந்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சமீபத்தில் இணைந்தனர். பள்ளிப்பருவத்தில் இருந்து காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் குழந்தையும் பெற்றெடுத்தவர்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
ஆனால் இதற்கு இருதரப்பும் எந்த காரணத்தையும் கூறவில்லை. சைந்தவி தாயால் பிரச்னை, ஜி.வி பிரகாஷ் நடிக்க சென்றதுதான் பிரச்சனை என பல கருத்துக்கள் இணையத்தில் உலாவி வந்தது. இந்நிலையில் மற்ற ஜோடிகளின் விவாகரத்து காரணத்தைப் போன்று இந்த ஜோடியின் பிரிவுக்கும் நடிகை திவ்ய பாரதி தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுசெல்லாம் இல்லங்க.. பழைய படத்தை மிக்ஸியில் அரைச்சா கோட்… வெளுத்துவிட்ட பயில்வான் ரங்கநாதன்
பேச்சுலர் படம் மூலம் ஜிவி பிரகாஷிற்கு நாயகியாக நடித்து கோலிவுட் வந்தவர் திவ்யபாரதி. ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக எந்த படத்தில் வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து தற்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படத்தில் அவரை நாயகியாக்கி இருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வருவதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. அதிலும் திவ்யபாரதி காரில் செல்லும்போது ஒரு நபரை மறைத்து இன்ஸ்டாவில் பாட்டு பாடி ஸ்டோரி வைத்து இருக்கிறார். ஆனால் அந்த குரலை வைத்தே ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் என்பதை கண்டறிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்த போஸ்ட்டைக் காண: https://www.instagram.com/reel/C_dn_SQyEge/?igsh=MWRneGxhZW45bzJjcg==