வாஜி.. வாஜி.. சிவாஜி… பாட்டை போடுங்கய்யா!.. தர்மன் ரஜினியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரேயா!..

X
வாஜி.. வாஜி.. சிவாஜி… பாட்டை போடுங்கய்யா!.. தர்மன் ரஜினியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரேயா!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ’சிவாஜி தி பாஸ்’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா சரண், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை மீண்டும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஸ்ரேயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி தி பாஸ்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்தனர். இப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், ரஜினியின் முக்கியமான பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

சமீபத்தில் ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த ஸ்ரேயா, அவரை முதன்முதலில் சந்திக்கும்போது தான் மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் ரஜினியின் எளிமையான அணுகுமுறை தன்னை இயல்பாக நடிக்க வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஸ்ரேயாவுடன் இருக்கும் புகைப்படத்தில் ரஜினிகாந்த் ‘தர்மன்’ படத்துக்கான லுக்கில் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் ஸ்ரேயா ‘தர்மன்’ படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அஸ்வத் மாரிமுத்து அதற்குள் தர்மன் படத்தின் 2 ஷெட்யூல்களை முடித்து விட்டு 3வது ஷெட்யூலை விரைவில் தொடங்கப் போகிறாராம். இதே வேகத்தில் சென்றால், ஜெயிலர் 2 ரிலீஸுக்கு முன்பாக தர்மன் படத்தை ரெடி செய்து விடுவார் என்றும் கூறுகின்றனர்.