இந்தியன் 2 படம் குறித்து கேள்வி.. பிரஸ் மீட்டில் திடீரென்று கோபப்பட்ட சித்தார்த்!...

miss you
சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ் யூ படத்தின் பிரஸ்மீட்டில் இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு பதிலளித்து இருக்கின்றார்.
நடிகர் சித்தார்த்:
தமிழ் சினிமாவில் நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகர் சித்தார்த்.
இதையும் படிங்க: குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க…. காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்
சித்தா திரைப்படம்:
கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படம் நடிகர் சித்தார்த்துக்கு சிறந்த கம்பேக்-காக இருந்தது. அதனை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது. அதனை தொடர்ந்து மிஸ் யூ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
மிஸ் யூ திரைப்படம்:
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட கமர்சியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் என் ராஜசேகர் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். காதல், ஆக்ஷன், காமெடி என்றும் முழு நீள பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகி இருக்கின்றது.

miss you
இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் கருணாகரன், நரேன், அனுபாமா, பாலசரவணன், சஷ்டிகா என்று பல பிரபலங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சித்தார்த் ஒரு லவ்வர் பாய் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்கின்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்தை நவம்பர் 29ஆம் தேதி வெளியிடுவதற்கு பட குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து டிசம்பர் 13 ஆம் தேதிக்கு இப்படத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
பிரஸ்மீட்:
நடிகர் சித்தார்த் மிஸ் யூ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் இயக்குனர் என் ராஜசேகர் மற்றும் நடிகை ஆஷிகா ரங்கா ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் சித்தா திரைப்படத்திற்கு பிறகு உங்களை எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மனோஜுக்கு பம்பர் லாட்டரியால இருக்கு… கதிர் பிரச்னையை தீர்த்த அண்ணன்கள்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி!..
அதற்கு பதிலளித்த சித்தார்த் அப்போது இந்தியன் 2 உங்களுக்கு படமாக தெரியவில்லையா? அந்த படம் வெளியாகி ஆறு மாதம் கூட ஆகவில்லை. அப்புறம் எப்படி நீங்கள் எந்த தமிழ் சினிமா படங்களிலும் என்னை பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள். இந்த படம் குறித்து உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்றால் எங்கள் வீட்டில் என்னை பாராட்டினார்கள்.
இந்த படத்தில் நான் சிறப்பாக நடித்திருந்ததாகவும், சங்கர் சார் இயக்கத்தில் இரண்டாவதாக ஒரு படத்தில் நடித்திருக்கின்றேன் என்று கூறினார்கள். நான் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். நீங்கள் தான் தமிழ் சினிமாவில் நான் இல்லவே இல்லை என்ற அளவுக்கு கூறுகிறீர்கள்' என சற்று கோபமாக சித்தார்த் பதிலளித்திருந்தார்.