ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘மொத ராத்திரி’ படம் கடந்த வாரம் தான் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோயினாக அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் சிலம்பரசன் எக்ஸ் தளத்தில் “‘மொத ராத்திரி’ படத்தை பார்த்து என்ஜாய் பண்ணேன்.
நம்ம சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களை மற்ற மொழிகளில் வரும்போது பாராட்டுகிறோம். அதேபோல் தான் தமிழில் வெளியாகும்போதும் நாம் சப்போர்ட் பண்ண வேண்டும்.
வில்லேஜில் நடக்கும் திருமணத்தை சுற்றி ஒரு நாள் இரவு முழுவதும் நடப்பது போல் ரியலாக கதைக்களம் அமைத்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். எனது ரசிகர்கள் மற்றும் சினிமா லவ்வர்ஸ் அனைவருமே இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து இந்த டீமை சப்போர்ட் பண்ணுங்க” என்று பதிவிட்டுள்ளார்.







