சிம்ரன் காதல் பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்! இந்த விஷயம் தெரியாம போச்சே
Actress Simran: தமிழ் சினிமாவில் 90களில் ஒரு முன்னனி நாயகியாக இருந்தவர் நடிகை சிம்ரன். பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த சிம்ரன் ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் தான் இந்த கோலிவுட்டில் வலம் வந்தார். ஆனால் இப்போது பக்கா ஒரு தமிழ் பொண்ணாக மாறியிருக்கிறார் சிம்ரன். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரே நடிகை சிம்ரன்தான். அதுவும் இடுப்பழகி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
டான்ஸில் இவருக்கு இணை இவர்தான். அந்தளவுக்கு நடனத்தில் புயலாக இருந்தார் சிம்ரன். தமிழில் விஜய், அஜித், சூர்யா, பிரபுதேவா, விஜயகாந்த் என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்து பெரிய புகழ் பெற்றவர் சிம்ரன். ஏகப்பட்ட விருதுகளை அள்ளியவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி சினிமாக்களிலும் நடித்து புகழ் பெற்றவர் சிம்ரன்.
இதையும் படிங்க: மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…
இந்த நிலையில் நடிகை சிம்ரன் யாரையாவது காதலித்திருக்கிறாரா என்ற ஒரு கேள்வியை ரசிகர் ஒருவர் பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘சிம்ரன் முன்னனி நாயகியாக இருந்த சமயத்தில் அவரை பல பேர் காதலித்திருக்கிறார்கள். அவர்களில் சில பேரை சிம்ரனும் காதலித்திருக்கிறார்’ என்ற ஒரு தகவலை கூறினார்.
ஆனால் இப்போது அவர் திருமணம் செய்து கொண்ட தீபக் பாஹாவை கூட சிம்ரன் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் சிம்ரன் ஒரு உச்சத்தில் இருக்கும் போது மிகப்பெரிய நடிகர்களுடன் சேர்த்து வைத்து பல வதந்திகள் பரவின. குறிப்பாக கமலுடன் இவர் நெருக்கமாக இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
இதையும் படிங்க: ஆமா கல்யாண வாழ்க்கை சலித்துவிட்டது…ஓபனாக கூறிய சினேகா.. என்ன பிரச்னை தெரியுமா?