விவாகரத்து கொடுக்க ரெடியாகும் ரோகிணி!… குஷியில் மனோஜ்!…

X
விவாகரத்து கொடுக்க ரெடியாகும் ரோகிணி!… குஷியில் மனோஜ்!…

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான சிறகடிக்க ஆசையில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

ரோகிணியை பார்க்க வந்திருக்கும் ஸ்ருதி மற்றும் மீனா, மனோஜை நம்புவது தவறு என அட்வைஸ் கொடுக்கின்றனர். ஆனாலும் ரோகிணி மனோஜ் மீது தனக்கு இன்னும் காதல் இருக்கு! அவன் அம்மா தான் அவனுக்கு அறுவுரையை தப்பா சொல்லிட்டு இருக்காங்க என்கிறார். 

இருந்தாலும், மனோஜ் சரியில்லை. அவருடன் வாழ்வது பற்றி நீங்க யோசிச்சே ஆகணும். நேரம் எடுக்காமல் சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு எடுத்துருங்க என ரோகிணியிடம் சொல்லிவிட்டு செல்கின்றனர் மீனா மற்றும் ஸ்ருதி. 

ஆட்டோ சவாரியால் பள்ளி குழந்தைகள் விபத்து நடக்க இருப்பதால் தானே வேன் வாங்கி விடலாம் என்ற முடிவிற்கு வருகிறார் முத்து. அதற்கான வேன் பார்த்து அதை ஓட்டி பார்த்து ஓகே செய்து விடுகிறார். பின்னர் இந்த முடிவை வீட்டில் சொல்ல முடிவெடுக்கிறார். 

தொடர்ந்து மனோஜ் தன்னுடைய நிலையை ஷோரூமில் நண்பர்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டு இருக்கிறார். என்ன செய்ய போறேன். ரெண்டு மனைவி இருக்காங்க. யாரை கழட்டிவிடப்போறேன் எனவும் கடுப்பாகி கொண்டு இருக்கிறார். 

அந்த நேரத்தில் ரோகிணி ஷோரும் வர மீண்டும் மனோஜ் கர்ப்பத்தை கலைக்கவும், விவாகரத்து கேட்டும் மறுபடியும் பேச கடுப்பாகும் ரோகிணி இந்த வாரம் வீட்டுக்கு வரேன். விவாகரத்து தரேன் எனவும் கூறுகிறார். இதில் மனோஜ் சந்தோஷப்படுகிறார். 

தொடர்ந்து முத்து வீட்டுக்கு வந்து வேன் வாங்க இருக்கும் விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால் விஜயா எப்போதும் போல திமிராக பேச மற்ற எல்லாருமே முத்துவின் நல்ல மனது குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.