ரோகிணிக்காக களமிறங்கும் நால்வர் அணி… மனோஜ் சோலி முடிஞ்சிது!

X
ரோகிணிக்காக களமிறங்கும் நால்வர் அணி… மனோஜ் சோலி முடிஞ்சிது!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த சுவாரசிய தொகுப்புகள்.

ரோகிணிக்கு அபார்ஷன் செய்ய இருக்கும் விஷயத்தை மீனா மற்றும் சுருதி இருவரும் தெரிந்து கொள்கின்றனர். இதை அவர்கள் ரவி மற்றும் முத்துவிடம் சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர். முத்து கோவமாக இதை கேட்கலாம் என தொடர ரவி தற்போது நாம் அமைதியாக இருப்பது தான் நல்லது என்கிறார்.

மீனாவும் இந்த விஷயத்துல நம்ம தலையிட்டா அத்தை இன்னும் வேகமா வேலை செய்வாங்க. அதனால நம்ம ரோகிணிக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் பொறுமையா இருப்பது தான் நல்லது என்கிறார். முத்துவுக்கும் அதுவே சரியான பட அமைதியாகி விடுகிறார்.

 அடுத்த நாள் காலை வீட்டிற்கு ஜோசியர் வர குடும்பமே குழப்பத்தில் இருக்கிறது. பின்னர் தான் தெரிகிறது மனோஜ்க்கு கல்யாண விஷயமாக பார்க்க விஜயா வர சொல்லி இருக்கிறார். ஆனால் ஜோசியர் ஜாதகத்தை பார்த்துவிட்டு இவருக்கு ஏற்கனவே இரண்டாவது கல்யாணம் ஆகிவிட்டதாக அதிர்ச்சியை போடுகிறார்.

இதைக் கேட்டு குடும்பமே யோசனையில் இருக்க முத்து ஒரு வேலை மனோஜ் கல்யாணம் செய்து விட்டானோ என கேள்வியை கேட்டு விடுகிறார். அதற்கிடையில் பாட்டி வந்துவிட அவரை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்று விடுகிறார் அண்ணாமலை.

 குடும்பத்தினரிடமிருந்து தப்பிக்க தனக்கு தற்போது கல்யாணம் வேண்டாம்.  ரோகினிடமிருந்து விவாகரத்து வாங்கிய பின்னர் கல்யாணம் செய்து கொள்ளலாம் என மனோஜ் பதில் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.

 ரோகிணியை பார்க்க மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் பழம் வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இதை பார்க்கும் ரோகினி சந்தோஷப்பட்டாலும்  மனோஜோடு வாழ்வது சரி இல்லை என ஸ்ருதி ஒரே போடாக போடுகிறார்.

மனோஜுக்கு இன்னும் காதல் இருக்கிறது. ஆன்ட்டி பேச்சை கேட்டுக் கொண்டுதான் அவர் இப்படி செய்வதாக ரோகினி நம்பிக்கையுடன் பேசுகிறார். உன் புருஷன் ஆல்ரெடி இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டாமா என ரோகிணியிடம் போட்டு விடுங்க டைரக்டர் சார்.