Home latest news வெங்கட் பிரபுவும் இல்ல.. பார்க்கிங் டைரக்டரும் இல்ல!.. அந்த டைரக்டரை டிக் அடித்த SK!..

வெங்கட் பிரபுவும் இல்ல.. பார்க்கிங் டைரக்டரும் இல்ல!.. அந்த டைரக்டரை டிக் அடித்த SK!..

sivakarthikeyan

அமரன் திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பராசக்தி படத்தை முடித்துவிட்டு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்திற்கு போய்விட்டார். வெங்கட் பிரபு படம் பட்ஜெட் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. தயாரிப்பாளர் பட்ஜெட்டை குறைக்க சொல்வதால் அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியுள்ள தாய் கிழவி படத்தை இயக்கியுள்ள சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. மிகவும் குறுகிய கால படமாக இப்ப படம் உருவாக உள்ளதால் இந்த படத்தை முடித்த பின்னரே சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படத்திற்கு செல்வார் எனத் தெரிகிறது.

ஒருபக்கம் பார்க்கிங் பட இயக்குனர் அருண்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை சொல்லிவிட்டு காத்திருக்கிறார். எனவே யாருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

தாய் கிழவி படத்தை முழுவதுமாக பார்த்த சிவகார்த்திகேயன் சிவகுமார் முருகேசனை அழைத்து மிகவும் பாராட்டு பேசியிருக்கிறார். அதோடு ‘எனக்கு ஏதேனும் ஒரு கதை இருக்கிறதா?’ என கேட்க சிவக்குமார் முருகேசன் சொன்ன கதை அவருக்கு பிடித்து போய் தற்போது அந்த படம் டேக் ஆப் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதமே துவங்கும் என்கிறார்கள்.

Previous articleThalaivar173: இவ்ளோ அவசரமா புரமோ ஷூட் எதுக்கு!.. இதான் மேட்டரா?!…
Next articleவேள்பாரி படத்துக்கு நடிகர்களை டிக் அடித்த ஷங்கர்!.. ஆனா ஒரு கண்டிஷன்!…