Connect with us

குட்டி SK ரெடி!.. சிவகார்த்திகேயனும்.. அவரின் மகனும்.. க்யூட் வைரல் போட்டோ!…

latest news

குட்டி SK ரெடி!.. சிவகார்த்திகேயனும்.. அவரின் மகனும்.. க்யூட் வைரல் போட்டோ!…

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்தும், மிமிக்ரியும் செய்து வந்தவர் சிவகார்த்திகேயன். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கி முன்னணி நடிகராக மாறினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகியவை இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. சினிமாவில் நுழைந்து சில வருடங்களிலேயே அவருக்கு முன் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓவர்டேக் செய்து மேலே போனார் சிவகார்த்திகேயன்..

அதாவது அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.. இவரின் வளர்ச்சி பல நடிகர்களுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இதை அஜித்தே தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இவரின் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது.

அதே நேரம் அதன்பின் வெளிவந்த மதராஸி, பராசக்தி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து தாய்க்கிழவி படத்தின் இயக்குனர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.. சிவகார்த்திகேயனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்..

அதில் மகனுடன் போஸ் கொடுத்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.. இதை பார்த்து ரசிகர்கள் குட்டி SK ரெடி என பதிவிட்டு வருகிறார்கள்..

To Top