நடிகை சினேகா தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சினேகா, அதில் அவருக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் இணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துகள் டாடா, என் காதல், என் சிறந்த நண்பர், என் வாழ்நாள் தலைவலி,அதாவது என் கணவர் என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ள சினேகா, தங்களது வாழ்க்கை அன்பு, சிரிப்பு, சண்டை, வாக்குவாதம் மற்றும் பல நினைவுகளால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் பிரசன்னாவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், என்னை சரியாக எரிச்சலூட்டுவதுடன் அதே நேரத்தில் சிரிக்க வைக்கத் தெரிந்தவர் நீங்கள்தான், என்றும் உன்னை நேசிக்கிறேன். மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், இதேபோல் குறும்புத்தனத்துடனும் இரு, இந்த ஆண்டாவது கொஞ்சம் அடக்கமாக இருக்க முயற்சி செய் என நகைச்சுவையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் தங்களது 14-வது திருமண நாளையொட்டியும் சினேகா, பிரசன்னா இருவரும் சில பதிவுகளை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு சினேகா பகிர்ந்துள்ள இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.







