சூரியின் சூப்பர் வளர்ச்சி!.. ஒடிஸி ரேஞ்சுக்கு வந்த மஜாவான அறிவிப்பு!..

X
சூரியின் சூப்பர் வளர்ச்சி!.. ஒடிஸி ரேஞ்சுக்கு வந்த மஜாவான அறிவிப்பு!..

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அலைகள் எழத் தொடங்கிவிட்டன, போர் தொடங்கப் போகிறது என்ற பரபரப்பான பதிவுடன், செப்டம்பர் 10-ம் தேதி IMAX திரைகளிலும் ‘மண்டாடி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஆக்‌ஷன் மற்றும் புதிய அனுபவத்தை பெற தயாராகுங்கள்” என படக்குழு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், அச்சுத்குமார், பாலசரவணன், ரவீந்திர விஜய், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்ட கடல் சாகசம் மற்றும் விளையாட்டு பின்னணியிலான ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் மண்டாடி கடல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை IMAX வடிவில் ரசிகர்கள் பிரம்மாண்டமாக பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி விடுதலை படத்துக்குப் பிறகு கதையின் நாயகனாகவும் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் மாறிய நிலையில், ஒடிஸி ரேஞ்சுக்கு தனது படத்தை ஐமேக்ஸ் திரைகளிலும் முதல் முறையாக வெளியிடப் போவது சூப்பரான வளர்ச்சி தான்.