---Advertisement---

திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரஜினி மகள் சௌந்தர்யா!.. காரணம் இதுதான்!…

Published on: February 17, 2026
---Advertisement---

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா.. இவரும் திரைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்.. ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களுக்கு டைட்டிலை வடிவமைத்தவர் இவர்தான். மேலும் அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் என்கிற அனிமேஷன் திரைப்படத்தின் இவர் இயக்கியிருந்தார்.. அந்த படத்தின் தயாரிப்பாளராகவும் சௌந்தர்யா இருந்தார்..

மேலும், வெங்கட் பிரபு இயக்கிய கோவா திரைப்படத்தையும் சௌந்தர்யா தயாரித்திருந்தார். அதேநேரம் அவர் தயாரித்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த வித் லவ் திரைப்படத்தை சௌந்தர்யா தயாரித்திருந்தார். கடந்த 6ம் தேதி இப்படம் வெளியானது.

நல்ல ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்த வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 25 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.. இது சௌந்தர்யாவின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.. இந்நிலையில்தான், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று மதியம் திடீரென முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களும் வெளியாகி வைராலாகி வருகிறது. வித் லவ் திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில் சௌந்தர்யா முதலவரிடம் ஆசி பெற்றதாக சொல்லப்படுகிறது..