Home latest news கூலி படத்துல 10 நிமிஷம்தான் நல்லாருந்தது!.. ரஜினி பொண்ணே இப்படி சொல்லிட்டாரே!..

கூலி படத்துல 10 நிமிஷம்தான் நல்லாருந்தது!.. ரஜினி பொண்ணே இப்படி சொல்லிட்டாரே!..

coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், சுருதிஹாசன், சௌபின் சாகிர், நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் கூலி. லோகேஷ் கனகராஜ் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை எடுப்பவர், ரஜினியோ மாஸ் ஹீரோ.. இரண்டு பேரும் கூட்டணி அமைத்ததால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. தமிழில் முதல் 1000 கோடி வசூலை அள்ளும் படமாக கூலி இருக்கும் என்றெல்லாம் பலரும் பேட்டி கொடுத்தார்கள்.

ஆனால், படம் வெளியானபின் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. கதை, திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், எதிர்பார்த்தது போல் இல்லை என்றெல்லாம் பலரும் விமர்சனம் வைத்தார்கள்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் தான் செய்த தவறையும் ஒப்புக்கொண்டார்.. நான் சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ‘கூலி படத்தில் அப்பாவை டீஏஜிங் இளமையாக கட்டிய 10 நிமிட காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேநேரம் தலைவர் ரசிகையாக நான் இன்னும் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பேன்.. படம் எனக்கு பிடித்திருந்தது.. ஆனால் அப்பா நடித்த படங்களில் எனக்கு இது ஃபேவரைட் இல்லை.

தற்போது ரசிகர்கள் அதிக வன்முறை இருக்கும் படங்களை ரசிப்பதில்லை.. கூலி படத்தை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு லோகேஷ் கனகராஜ் மீது நிறைய மரியாதை இருக்கிறது. நிறைய நல்ல படங்களை அவர் கொடுத்திருக்கிறார்’ என சொல்லியிருக்கிறார்..

Previous articleVijay: விஜய் என் காலில் விழுந்து அழுதார் – வெங்கட் பிரபு சொன்ன அந்த சம்பவம்
Next articleOTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. ஓடிடியிலாவது ஓடுமா பராசக்தி!..