Cinema News
Serial Actress: போதைப்பொருள் கடத்தல்!… சென்னை மாலில் வசமாக மாட்டிக்கொண்ட ‘சுந்தரி’ சீரியல் நடிகை!…
சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா சென்னை மாலில் வைத்து போதைப்பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
தமிழகத்தில் இன்றைய சூழலில் இளைஞர்கள் அதிக அளவில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளால் சீரழியும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தனியார் கல்லூரிகளில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது.
இதையும் படிங்க: Nayanthara: நயன்தாரானாலே பேரழகி தானே?!… படம் ரேஞ்சுக்கு பில்டப்!… வெளியான மேரேஜ் ட்ரைலர்!…
இந்நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு போதைப் பொருளுடன் வந்திருக்கின்றார்.
அவரிடம் போதை பொருள் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார்கள். அங்கு அவரிடம் சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கின்ற அதிக வீரியம் கொண்ட போதை பொருளை வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போதை பொருளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் இந்த போதை பொருளை அவர் எங்கு வாங்கினார்? எதற்காக இங்கு கொண்டு வந்தார்? யாருக்கும் விற்பனை செய்ய கொண்டு வந்தாரா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகர்களுக்கு அவர் போதை பொருள்களை சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: Vijay: விஜயோட குணம் என்னன்னு தெரியுமா? போற போக்கப் பார்த்தா அவரு தான் அடுத்த ‘சிஎம்’ போல..!
அடுத்த கட்டமாக அவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்திருக்கின்றார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வர வர கஞ்சா, ஹெராயின், கொக்கை உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை மீனாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் என்கின்ற போதை பொருள் அதிக வீரியம் கொண்டது என்று கூறப்படுகின்றது. மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை தயாரிப்பதற்கு சூடோபெட்ரின் உதவுவது குறிப்பிடத்தக்கது.