latest news
மருமகள் முதல் கயல் வரை… சன் டாப் 5 சீரியல்களில் இன்றைய எபிசோட் இதுதான்..
Sun serials: பிரபல சன் டிவி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
கயல்: கயல் பெரியப்பா வீட்டில் சுப்பிரமணி எல்லாரும் எனக்கு எதிராக மாறிவிட்டீர்கள். பாத்துக்கிறேன் என சொல்லி செல்கிறார். பெரியப்பா பெரியம்மாவிடம் இன்னைக்கு கயல் வீட்டிற்கு வரும்போது அவளிடம் உண்மையை சொல்லி காலில் விழ வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறார்.
கயல் தன்னுடைய குடும்பத்துடன் விருந்திற்கு பெரியப்பா வீட்டிற்கு வர சுப்பிரமணி எங்கே காணவில்லை என கேட்கிறார். இதைக் கேட்டு பெரியப்பா அதிர்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க: கோலிவுட் ஹீரோக்களின் செண்டிமெண்ட் ஆயுதங்கள் இதுதான்!.. போட்டு பொளக்கும் புளூசட்டமாறன்…
மூன்று முடிச்சு: சூர்யா நந்தினியிடம் நீ எனக்கு பொண்டாட்டி மாதிரி தான். உண்மையான பொண்டாட்டி இல்லை எனக் கூறுகிறார். அருணாச்சலத்திடம் அம்மாவை வெறுப்பேத்துவதாக என்னிடம் நடப்பது எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் நந்தினி. சூர்யாவை கண்டிப்பதற்கு அவள் யார் என சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுந்தரி: கார்த்திக் தவறுதலாக விழப்போக அனு அவரை பிடித்து விடுகிறார். இதனால் அனுவை அறிந்து கொள்ளும் கார்த்தி, சரண்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்படியே நடந்து கொண்டால் உங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவேன் என சரண்யா மிரட்டி விடுகிறார். சுந்தரி திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி அமைதியா இந்த பிரச்சினையை முடிக்க பார்ப்பான் என பைனான்சியர் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் வரியிலே தனுஷ் மீது இவ்வளவு வன்மமா? வேற ஏதோ மாஸ்டர் பிளான் மாதிரி தெரியுதே…
மருமகள்: பிரபு எப்ப வேண்டுமென்றாலும் ஆதிரையிடம் தனிக்குடித்தனம் பற்றி பேச நினைப்பான் என அப்பா கூறிக் கொண்டிருக்கிறார். ஆதிரை பிரபுவிற்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து உங்களுக்கு என் மீது எவ்வளவு பாசம் இருக்கிறது என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் என்கிறார். சிவக்கலனா காதல் இல்லை என்பதை ஆதிரை தெரிந்து கொள்வாளா என பயம் கொள்கிறார் பிரபு.
சிங்கப் பெண்ணே: ஆனந்தி தூங்கிக் கொண்டிருக்க அன்பு நான் போறேன். நான்தான் அழகன் என நீ எப்படியும் கண்டுபிடித்துவிடுவாய் என கூறிக் கொண்டிருக்கிறார். அன்புவின் தங்கை உங்களை ரொம்ப பிடிச்சது. இப்ப நீங்களும் போறேன்னு சொல்றீங்க என்கிறார். ஆனந்தி அன்புவிடம், போக முடிவு எடுத்துட்டீங்க. அப்ப என் அழகனை திருப்பி கொடுத்துட்டு போங்க என்கிறார்.