
துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இது சூர்யாவின் 46வது திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது. கஜினி போல மீண்டும் ஒரு பெரிய பணக்காரராக இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்கிற செய்தி மட்டும் அப்போது வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்த படத்தை முடித்துவிட்டு மலையாள பட இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார் ..பல வருடங்களுக்குப் பின் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான் சூர்யா 46 படத்தின் புது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு விஸ்வநாத் & சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.. சூர்யா குழந்தையுடன் நிற்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது..
இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.. இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகவுள்ளது..

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படம் அமையாத நிலையில் கண்டிப்பாக விஸ்வநாத் & சன்ஸ் அந்த வெற்றிடத்தை நிரப்பும் எனத் தெரிகிறது..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
