நடிகர் சூர்யா இந்த ஆண்டு (2026) ‘கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ்’ என தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இதனால் இவருடைய அன்பான ஃபேன்ஸ் ஹேப்பி மோடில் உள்ளனர்.
இவர் நடிப்பில் உருவாகும் புது படம் தான் ‘சூர்யா 47’. இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, இதில் ஹீரோயினாக நஸ்ரியா வலம் வரப் போகிறார்.
சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆல்ரெடி முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வொர்க் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது, இப்படத்தின் டைட்டிலை வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.







