Home latest news Velpari: சுட சுட அப்டேட்! ‘வேள்பாரி’யில் மூவேந்தர்களாக களமிறங்கும் நடிகர்கள்..

Velpari: சுட சுட அப்டேட்! ‘வேள்பாரி’யில் மூவேந்தர்களாக களமிறங்கும் நடிகர்கள்..

shankar
shankar

ஷங்கர் இயக்கத்தில் அடுத்து பிரம்மாண்டமாக உருவாகப்போகும் திரைப்படம் வேள்பாரி. இந்தப் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறாததால் வேள்பாரியில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றார் ஷங்கர்.

சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற நாவல்தான் வேள்பாரி. இதை பிரம்மாண்டமாக ஒரு பேன் இந்தியா திரைப்படமாக ஷங்கர் உருவாக்க இருக்கிறார். அதற்கான நடிகர் தேடலும் நடைபெற்றது. ஆரம்பத்தில் ரஜினி கமல் பெயர்கள் அடிப்பட்டது. பொன்னியின் செல்வன் வந்த பிறகு விக்ரம், ரவிமோகன் இவர்களின் பெயர்களும் அடிப்பட்டது. ஆனால் ஷங்கரின் தேடல் இன்னும் அதிகமானது.

பேன் இந்தியா படம் என்பதால் வெவ்வேறு மொழிகளில் பெரிய நடிகர்களாக இருக்கும் சில பேரிடம் இது சம்பந்தமான ஆலோசனைகளும் நடைபெற்றது. கடைசியாக வேள்பாரியில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கரிகாற்சோழனாக பொன்னியின் செல்வன் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அதனால் வேள்பாரியில் விக்ரமை தட்டி தூக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவரோடு வேள்பாரியில் பிரபாஸ், யாஷ், சூர்யா ஆகியோர் மூவேந்தர்களாக நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகின்றது. ரன்வீர் கபிலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous articleWith love: வித் லவ் படத்தின் முதல் விமர்சனம்: ரஜினி இப்படி சொல்லிட்டாரே
Next articleகுட்டி SK ரெடி!.. சிவகார்த்திகேயனும்.. அவரின் மகனும்.. க்யூட் வைரல் போட்டோ!…